போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதம் - திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார்.
Update: 2024-03-26 11:20 GMT
திண்டுக்கல் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக அர்ஜுனன் என்பவரை நத்தம் போலீசார் போக்சோ வில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நத்தம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் அர்ஜுனனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.