வாலிபர் தற்கொலை
குற்றாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-08 05:40 GMT
தற்கொலை
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள வேப்ப மரத்தில் வேல்ராஜ் (22) என்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.