வெள்ளகோவிலில் வாலிபர் தற்கொலை
வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-27 16:30 GMT
தற்கொலை
வெள்ளகோவில் தாராபுரம் சாலை தீத்தாம்பாளையம் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அஜய் வயது 20. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருடைய தந்தையின் கால் அகற்றப்பட்டுள்ளது. இவருடைய அண்ணன் மனநிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உப்புபாளையம் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அஜய் வேலைக்கு சென்று வந்தார்.
தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.இதனால் மணமுடைந்த காணப்பட்ட அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.