மது குடிக்க தாயார் பணம் தராததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மது குடிக்க தாயார் பணம் தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-18 01:28 GMT

பைல் படம் 

வேலூர் செதுவாலை இந்திராநகரை சேர்ந்தவர் சாலை அமைக்கும் தொழிலாளி முருகன் (வயது 28). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் அவர் மதுகுடிக்க வீட்டில் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாயார் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News