விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம்,ஈச்சம்பட்டியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-22 05:43 GMT
தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஈச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மகன் ராஜா. இவர் நேற்று மதியம் தனது பண்ணையில் வைத்து பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு ராஜா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இது தொடர்பாக பாடாலூர் போலீசார் ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.