ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!
ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-11 11:43 GMT
வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி புளியங்கா காலனியைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் காளிமுத்து (43). குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து கூட்டாம்புளியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பொன்னங்குறிச்சி ரோடு வெள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே காளிமுத்து மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.