மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!
மின் சாரம் தாக்கியதில் இளைஞர் பலி.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 04:34 GMT
இளைஞர் பலி
திருமயம் அருகே உள்ள கண்ணனுார் தெற்கு புதுவயலை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் அருண்குமார் (20). நேற்று வயலில் விவசாய பணிகள் நடந்து வந்த நிலையில், மின்மோட்டார் இயக்குவதற்காக மின்மாற்றியை ஆப் செய்து விட்டு அருண்குமார் பியூஸ் போட்டார். அப்போது மின் சாரம் தாக்கியதில் அருண்குமார் உயிரிழந்தார். இது குறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.