ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Update: 2024-07-04 02:34 GMT
மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் 27 வயதான முத்து இருளாண்டி. இவர் வேனில் ஜூலை 19ல் விருதுநகர் அருகே இருக்கன்குடி-பாலவநத்தம் ரோட்டில் 40 கிலோ விதம் 33 மூட்டைகளில் 1320 கிலோ ரேஷன் அரிசி கடத்தினார். இவரை விருதுநகர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ரேஷன் அரிசி கடத்தலை தொடர்ச்சியாக செய்து வந்ததால் விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவில் முத்து இருளாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தனது கணவர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என அவரது கர்ப்பிணி மனைவி விஜயலட்சுமி கடந்த ஜூன் 28-ம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்த நிலையில் இவரது கணவர் முத்து இருளாண்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.