திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், சுந்தம்பட்டி பகுதியில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-06 02:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம் , கந்தர்வகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தம்பட்டி கிராமத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படும் 31 வயது முத்துசாமி தனது வயலில் மரத்தில் கயிறு மூலமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . பொதுமக்கள் கொடுத்த தகவலில் பேரில் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் . தற்கொலை செய்து கொண்டவரின் தகப்பனார் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் விசாரணை செய்து வருகிறார்.