கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

துறையூா் அருகே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரைப் போலீசார் கைது செய்தனா்.;

Update: 2024-06-17 06:30 GMT
கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

பைல் படம்

  • whatsapp icon
ஆலத்துடையான்பட்டியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரபு (37) கடந்த 27.11.2021-இல் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து இரு ஆண்டுகளாக கொலையாளியைத் தேடி வந்தனா். இதனால் இவ்வழக்கில் தொடா்புடைய கொலையாளியைக் கைது செய்ய, ராம்ஜிநகா் காவல் ஆய்வாளா் வீரமணி தலைமையில் தனிப் படையை திருச்சி எஸ்.பி., வருண்குமாா் அமைத்தாா். தனிப்படை போலீஸாா் விசாரணையில் ஆலத்துடையான்பட்டி நடராஜ் மகன் ரமேஷ்(29) பணம் கொடுக்கல் வாங்கலில் பிரபுவுடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் அவரைக் குத்திக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Tags:    

Similar News