அலங்காநல்லூரில் இளைஞர் வீலிங்; போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பார்ப்பு
மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் 66 கோடி செலவில் கலைஞர் விளையாட்டு அரங்கம் பகுதியில் வீலிங் செய்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரல்.*
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் இளைஞர்களின் பைக்-சாகசம் செய்யும் லீலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சாகசங்கள் செய்வதும், பைக்ரேசில் ஈடுபடுவதும், வீலிங் செய்வது என இளைஞர்களின் செயலால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சாலைகளில் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.
இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் அபராதமும், கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் அதிகளவு சாகசம் செய்து அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராம், வாட்ஸ்சப், facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் அந்த காட்சிகள் கண்டு பலரும் இதேபோன்று லைக்ஸ் காக சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரத்தியோக சாலையுடன் 66கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து ஏறு தழுவுதல் அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட தார்சாலையில் பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாததால் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு அரங்கம் செல்லும் சாலையில் தற்போது இளைஞர்கள் படையெடுத்து, தங்களது விலையுயர்ந்த பைக்கை வீலிங் செய்து அதனை காட்சிப்படுத்தி சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அதுபோன்ற ஒரு சம்பவத்தின் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பைக் வீலிங் செய்யும் இளைஞர்கள் வீடியோ வைரலான நிலையில் இவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா.? தற்போது அந்த பகுதி முழுவதும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சான்றுகின்றனர். கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாடு இன்றி கிடப்பதால் வீலிங் செய்வதற்கும், சாகசத்தில் ஈடுபடுவதற்கும் இளைஞர்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.