துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்த மண்டல தலைவர் !

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2024-04-02 07:13 GMT

 மண்டல தலைவர் இலக்குமி

கோவை:இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்றத்தில் வாக்களிக்க கோரி 52 வது வட்டத்திற்கு உட்பட்ட பி.எஸ்.ஜி.ஹட்கோ காலனி பகுதியில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலப் பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களையும்,52 வது வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Tags:    

Similar News