மண்டலம் விட்டு மண்டலம் இடமாறுதல் - கைவிட கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்களை மண்டலம் விட்டு மண்டலம் இடம் மாறுதல் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். கரூரில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-02-14 10:01 GMT

 கரூர் எடுத்த தாந்தோணி மலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், கரூர் மண்டல, ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டு பேரவை கூட்டம் சங்கத்தின் துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் ராஜேந்திரன் பொது செயலாளர் விஜயகுமார் பொருளாளர் சக்திவேல் மாநில சமையலறை துணை பொது செயலாளர் முருகராஜ் செயலாளர் கோபிநாதன் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில், நிர்வாக காரணங்கள் என்ற பெயரால், தொழிலாளர்களை மண்டலம் விட்டு மண்டலம் பணியிட மாறுதல் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும், பேருந்துகளுக்கு போஸ்டிங் போடுவதில் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் நிர்பந்தத்திற்கு நிர்வாகம் அடிபணிய கூடாது, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய விழாவின் போது தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் முறையில் பாரபட்சம் நிர்வாகம் காட்டக்கூடாது, பணியின் போது நடத்துனர்களுக்கு தேவையற்ற, எழுத்து மூலமாக வேலைகளை செய்ய சொல்வதை முற்றிலும் வேண்டும். உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Tags:    

Similar News