கால்பந்து போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்!!
By : King 24x7 Desk
Update: 2025-03-29 09:18 GMT

Metro
பிரேசில் லெஜன்ட்ஸ் – இந்தியன் லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு மைதானத்தில் நாளை போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம். போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.