குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோயிலில் பாலாலய நிகழ்ச்சி

குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோயிலில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-22 15:05 GMT

பாலாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோயிலில் பாலாலய நிகழ்ச்சி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதையடுத்து பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 17- ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டது. தற்போது கோயிலை புதுப்பித்து வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயிலில் தனி கோயிலாக உள்ள விநாயகர், காளியம்மன், துர்கையம்மன், ஐயப்பன், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், ஆஞ்சநேயர் கோயில்களுக்கு பாலாலய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையொட்டி கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாக அதிகாரி சண்முகம் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அசோகன், படவேட்டு எல்லையம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் விட்டல், கே.எம்.ஜி.கல்வி குழுமத்தின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞர் கே.எம்.பூபதி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர்கள் .நடராஜன், .தனஞ்செயன், நகர்மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 3-மாதங்களுக்குள் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீப ஆராதனை நடைபெற்றது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News