நகராட்சி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா
தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தளிர்விடும் பாரதத்தின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தளிர்விடும் பாரதத்தின் ஆலோசகர் பொன்னையன், சமூக சேவகர் சித்ராபாபு, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தளிர்விடும் பாரதத்தின் பொருளாளர் வரதராஜ் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக தட்டாங்குட்டை முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், மகாத்மா காந்தி சமூக சேவை மையத்தின் தலைவருமான காந்தி நாச்சிமுத்து மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.ஏ. ரவி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காந்தி நாச்சிமுத்து அவர்கள் பேசும்பொழுது, மாணவ மாணவிகள் காந்தியக் கோட்பாடுகளை மதித்து அவற்றின்படி நடக்க வேண்டும். மேலும் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கூறினார். விழாவில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர் கே.ஏ.ரவி பேசும் பொழுது, மகாத்மா காந்தியடிகளின் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தைப் பற்றியும், விடுதலைக்காக அவர் போராடிய நிகழ்வுகளையும் மாணவரிடம் தெளிவாக எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவின் முடிவில் தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.