சிவகங்கையில் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Update: 2023-11-20 15:45 GMT

மாவட்ட ஆட்சியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டத்தில் இலட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் (Aspirational Blocks Programme) கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்பத்துார் வட்டாரத்தில், தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓராண்டு காலத்திற்கு தொகுப்பூதியத்தில் பணியாற்றிட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பத்துார் வட்டாரத்தில் வட்டார நிலை அலுவலர்களுடன் இணைந்து ”இலட்சிய இலக்கு வட்டார கருப்பொருட்களின் பணிகள் தொடர்பான முன்னேற்றத்திற்கு திட்டமிடல், வளர்ச்சி குறியீடுகளை கண்காணித்தல், மற்றும் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளல், வளர்ச்சி குறியீடுகள் மேம்படுத்திட உள்ளூர் வளங்களை பயன்படுத்துதல்,

சமுதாய பங்களிப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமூட்டுதல் மற்றும் வட்டார நிலையில் உள்ள பணியாளர்களின் திறன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளல்” - ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக ஓராண்டு காலத்திற்கு இலட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் கீழ் திருப்பத்துாரில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பணியாற்றிட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அதில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டத்துடன், தரவுகளை பகுப்பாய்வு செய்தல்,

தரவுகளின் தன்மை குறித்து விளக்குதல், சமூக ஊடகத்தில் ஈடுபாடுள்ள தகுதி, திட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் திறன் மற்றும் பணி முன் அனுபவத்துடன், மொழிவழி தொடர்பு திறன் ஆகியவற்றை கொண்ட தகுதியுடன் ஊரகம் சார்ந்த படிப்புகளை உயர் கல்வியில் படித்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாநில அரசின் பணியாளர் தேர்வு வழிமுறைகள் அடிப்படையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் நியமனம் நடைபெறும். மேற்கண்ட தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.55,000மட்டும் வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம், பணிக்குரிய கல்வித் தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட அறிவிக்கை விவரங்களை https://sivaganga.nic.in எனும் சிவகங்கை மாவட்ட இணையதளத்திலோ அல்லது மாவட்ட திட்ட அலுவலகத்தின் வாயிலாகவோ பெறலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 04.12.2023-ஆம் தேதிக்குள், மாவட்ட திட்ட அலுவலகம் / மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை-630561 என்ற முகவரியில், சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News