ராசிபுரம் அருகே கார் குப்புற கவிழ்ந்து விபத்து..

Update: 2023-11-23 17:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரம் அருகே கார் குப்புற கவிழ்ந்ததில் லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிபட்டி- சேந்தமங்கலம் செல்லும் சாலையில் ஸ்கார்பியோ கார் குப்பிற கவிழ்ந்து விபத்து. குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (33) என்பவர் ஸ்கார்பியோ காரை ராசிபுரம் நோக்கி ஓட்டி வந்துள்ளார்.அப்போது மழை பெய்த நிலையில் எதிரே இரு சக்கர வாகனம் வந்துள்ளது, ப்ரேக் பிடிக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள புளியமரத்தில் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. மேலும், கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Similar News