ஓய்வுபெற்ற போலீஸ் துணை கமிஷனர் மாயம்: மகன் புகார்
வளசரவாக்கத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் துணை கமிஷனர் மாயமானதாக மகன் புகார் அளித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-03 16:24 GMT
ஓய்வுப் பெற்ற கமிஷனர் வீடு
வளசரவாக்கம், வாணி நகரை சேர்ந்தவர் வள்ளி நாயகம்(72), போலீஸ் துணை கமிஷனர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர் இவரது மனைவி மாலா(70), கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற வள்ளிநாயகம் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மகன் முத்துக்குமார்(42), வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன துணை கமிசனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.