எதிரிகளை துப்பாக்கியால் சுட்டதாக மருது சேனை தலைவர் கைது
மதுரையில் கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக எதிரிகளை துப்பாக்கியால் சுட்டதாக மருது சேனை தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மருது சேனை தலைவர்
மதுரையில் கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நடைபெற்ற விசாரணையில் திடீர் திருப்பம் - எதிரிகளை துப்பாக்கியால் சுட்டதாக மருது சேனை தலைவர் உட்பட 6 பேர் கைது மதுரை திருமங்கலம் அருகே மருது சேனை நிறுவன தலைவர் மீது பெட்ரோல் கொண்டு வீசியும்,
துப்பாக்கியா சுட்டும் கொலை செய்ய முயற்சித்ததாக அளித்த புகார் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் திடீர் திருப்பமாக எதிரிகளை துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியதாக மருது சேனை நிறுவனத் தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கடந்த 14-ம் தேதி திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி விலக்கு பகுதியில் மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கார் மீது 7 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து ஆதிநாராயணன் கார் மீது மோதி பெட்ரோல் குண்டு வீசியும்,
துப்பாக்கியால் சுட்டும் கொல்ல முயற்சித்ததாக கூறி ஞானசேகர் உட்பட ஏழு பேர் மீது ஆதிநாராயணன் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் ஆதிநாராயணன் தனது குடும்பத்தினருடன் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில்., கார்த்திக், சிவப்பிரகாஷ், சுபாஷ் சந்திரபோஸ், முகமது தப்பீக் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆதிநாராயணன் மீது பெட்ரோல் குண்டு மட்டுமே வீசியதாகவும்.,
துப்பாக்கியால் சுடவில்லை எனவும் ஆதிநாராயணன் தான் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும்., இதனால் அங்கிருந்து நாங்கள் தப்பி ஓடியதாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து., அத்துமீறி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது.
தொடர்பாக போலீசார் ஆதிநாராயணனை அழைத்து கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆதிநாராயணன் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது ஆதரவாளர்களை வைத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு எதிரிகளை மிரட்டியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து., வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி போலீசார் எதிரிகளை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு பதிவு செய்து மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
அவர்களை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதனை அறிந்த ஆதி நாராயணன் ஆதரவாளர்கள் மருத்துவமனை வெளியே குவிந்ததால் பதற்றம் நிலவியது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து., மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிநாராயணன் உட்பட ஆறு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தன்னை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியும்., துப்பாக்கியால் சுட்டும் கொல்ல முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த மருது சேனைத் தலைவர் ஆதிநாராயணன் வழக்கில் திடீர் திருப்பமாக எதிரிகளை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டதாகவும் மருது சேனை தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட மருது சேனைத்தலைவர் ஆதிநாராயணன் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.