பணி நேரத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பணி நேரத்தில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டிய அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 05:45 GMT
மருத்துவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன். இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் ஒரு பெண் செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் பணியில் இருந்து விலக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.