நத்தக்காடையூரில் மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி இரவு பகலாக இரண்டு நாள் நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான அணிகள் பங்கேற்றது.

Update: 2024-07-15 16:41 GMT
காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் மற்றும் பழைய வெள்ளியம்ளையம் உதய நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி நத்தக்கடையூர் தங்கம் நகர் அருகில் உள்ள திடலில் இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெறும் பணிக்கு ரூ.60,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பரிசு பெரும் அணிக்கு ரூ.40000 பரிசும் கோப்பையும் மூன்றாம், நான்காம் இடம்பெறும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ.20,000 பரிசம் கோப்பையும் வழங்கப்பட்டது. கால் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நான்கு அணிகளுக்கு தல ரூ.10000 பரிசும் கோப்பைகளும், பெண்கள் பிரிவில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நான்கு அணிகளுக்கு தல ரூ.4000 பரிசம் கோப்பைகளும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நான்கு அணிகளுக்கு ரூ.5000 பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இப் போட்டிங்களானது சர்வதேச கபடி போட்டிகள் போல் மின் ஒளியில் இரவு பகலாக நடைபெற்றது.சர்வேதேச போட்டிகள் போல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு மாநில அளவிலான நடுவர்கள் மேற்பவையில் நடைபெற்றது. மேலும் இந்த போட்டிகள் கலந்து கொண்ட வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாத வண்ணம் ரப்பர் மேட் விரித்து இரண்டு ஆடுகளங்களில் நடைபெற்றது. சுமார் மொத்தம் 120க்கும் மேற்பட்ட தென்னிந்திய அளவிலான கபடி அணிகள் கலந்து கொண்டது. தமிழ்நாடு, கேலோ இந்தியா போன்ற போட்டிகளில் கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆண்கள் போட்டியில் முதல் பரிசை பி.ஜெ.பிரதர்ஸ் கோவை அணியும் இரண்டாம் பரிசை ஜெயசித்ரா கர்மன்ஸ் திருப்பூர் அணியும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை சக்தி பிரதர்ஸ் அந்தியூர் அணியும் இரண்டாம் பரிசை பி.கே.ஆர்.கல்லூரி கோபி அணியும் பெற்றனர்.40 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கடலூர் மாவட்ட அணியும் இரண்டாம் பரிசை திருச்சி துறையூர் அணியும் பெற்றனர். மேலும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு எல்.இ.டி.டிவிக்கள் சிறப்பு பரிசாக  வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Similar News