சாக்கடை கழிவுகளை கையுறை மற்றும் கால் உரையின்றி சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள்.

துப்புரவு பணியாளர்கள்

Update: 2024-07-25 05:16 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நகராட்சி. 30 வார்டுகளை கொண்ட நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 120 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியின் வடகரை வைத்தியநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்கள் கை உரைகள் அணியாமலும், கால் உரை அணியாமலும் சாக்கடையில் தேங்கியிருந்த கழிவுகளை வெறும் கைகளுடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட உரிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு நாள்தோறும் பொது இடங்கள் மற்றும் சாக்கடையில் தேங்கும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் துப்புரவு பணியாளர்கள் சுகாதாரமான முறையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News