மயிலாடுதுறையை புறக்கணிக்கும் ரயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட்ட ரயில்களை ரத்து செய்வதும் கழிப்பிட வசதி மற்றும் உட்காருவதற்கு வசதியற்ற டெமு பெட்டிகளை இணைப்பதைக் கண்டித்து மயிலாடுதுறை ரயில் சந்திப்பில் ரயில் பயணிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-28 12:46 GMT
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், மயிலாடுதுறை-தரம்பரம் பகல்நேர முன்பதிவில்லா ரயில் இயக்க வேண்டும், காலை 6.30 சேலம் ரயில், 8.15 திருச்சி இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகளை குறைத்து டெமு பெட்டிகளை இணைக்க கூடாது என்றும் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க வேண்டும், மயிலாடுதுறை-காரைக்குடி 75 ஆண்டுகளாக பழமையான ரயில்வேசையை மீண்டும் இயக்க வேண்டும், சோழன் எக்ஸ்பிரஸ் குத்தாலத்தில் நின்றுசெல்ல வேண்டும். மூத்தகுடிமக்களுக்கு கட்டணச்சலுகை மீண்டும் வழங்க வேண்டும், அம்ரித்பாரத்த திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் முன்பு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். செயலர் சாமி கணேசன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர்,வணிகர் சங்க பொறுப்பாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ராமச்சந்திரன், பேராசிரியர் முரளி, தமிழன் கணேசன், உட்பட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

Similar News