மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை ஊரக பகுதியில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் எம்.பி சுதா நன்றி தெரிவித்தார்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர்.சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை மத்திய ஒன்றியத்துக்கு உள்பட்ட இடங்களில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, திமுக ஒன்றிய செயலாளர் இமயநாதன் மற்றும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று தமக்கு வாக்களித்த மற்றும் தமக்கு வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். மயிலாடுதுறை மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி, திருமங்கலம், முருகமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அவர் நன்றி தெரிவித்தார். அப்போது இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.