மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கூட்டம்

Update: 2024-08-02 05:03 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தூர்வாரப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த கள ஆய்வுகளும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, கனிமவளத்துறை ஆகிய துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார். குறிப்பாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்தார்.

Similar News