மாடப்பள்ளி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

மாடப்பள்ளி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-08-02 07:47 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள சந்திரா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை‌ திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார் இந்த முகாமில், மாடப்பள்ளி செலந்தம்பள்ளி, அகரம், கதிரம்பட்டி, உள்ளிட்ட கிராம மக்களுக்கு கலந்து கொண்டனர் இந்த முகாமில் மின் இணைப்பு, பட்டமாறுதல், பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை விதவை சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளிட்ட15 துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமும் மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் பட்டா கேட்டு விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டாவை நல்ல தம்பி வழங்கினார். இந்த முகாமில், 4 கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News