மயிலாடுதுறை பொறுப்பேற்ற காவிரி துலா கட்டத்தில் காவிரி நீர் வருகை
காவிரி நீர் மயிலாடுதுறை கடை முக தீர்த்தவாரி நடைபெறும் புகழ்பெற்ற துலா கட்டத்தை வந்தடைந்தது இரவு நேரத்திலும் பொதுமக்கள் காவிரியை வரவேற்று உற்சாக முழக்கமிட்டனர்
மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணை வழியாக நேற்று முன்தினம் இரவு 8.10 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஏல்லையான திருவாலங்காடு கதவணைக்கு வந்தடைந்தது. நீர்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று காவிரி ஆற்றில் 1100கன அடி நீரை திறந்து விட்டனர். இரவு பகல் என 20 கிமீ. பயணம் செய்த காவிரி நீர் மயிலாடுதுறை நகரில் பிரசித்தி பெற்ற கடை முழுக்கு நடைபெறும் காவிரி துலா கட்டத்திற்கு நேற்று இரவு 8:40 மணிக்கு வந்தடைந்தது. காவிரி நீர் மயிலாடுதுறை நகருக்குள் நுழைவதை கண்டு களிக்க இரவு நேரம் பாராமல் பொதுமக்கள் காத்திருந்து ஆற்றில் தண்ணீர் வந்ததும் உற்சாகக் குரல் எழுப்பினர். காவிரி துலா கட்டத்தில் காத்திருந்த காவிரி ஆறு பாதுகாப்பு குழு அமைப்பினர் முத்துக்குமாரசாமி, அப்பர் சுந்தரம் உட்பட ஏராளமானோர் காவேரி அன்னையே வருக வருக என மலர் தூவிவரவேற்று சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். திங்கட்கிழமை மதியத்திற்கு பிறகு காவிரியின் கடை முக கதவணை உள்ள மேலையூரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.