காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுளியிட்டு காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கீழ்பவானி முறைநீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி தலைமையில் வெள்ளகோவில் ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் . கீழ்பவானி கடைமடை பகுதியான சென்னாக்கல்மேடு, மங்களப்பட்டி பகுதிகளில் கால்வாய்க்கு கான்கிரீட் அமைக்க வேண்டும் என்று கூறி காங்கேயம் கீழ்பவானி பாசன அலுவலகத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். காங்கேயம் அடுத்துள்ள முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காங்கேயம் திருப்பூர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கீழ் பவானி பாசன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட்டனர். கீழ்பவானி முறைநீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி தலைமையில் கீழ்பவானி கடைமடை பகுதியான சென்னாக்கல்மேடு, மங்களப்பட்டி பகுதிகளில் கால்வாய்க்கு கான்கிரீட் அமைக்க வேண்டும் என்று கூறி 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கான்கிரீட் அமைக்க வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளிகளை பணி செய்ய விடாமல் அப்பகுதியில் சிலர் இடையூறுகள் செய்வதாகவும் இதுகுறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான் அந்த புகார் மீது வழக்கு தொடுப்பதற்கு காலம் தாழ்த்துவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கால்வாய்க்கு கான்கிரீட் போடலாம் என நீதிமன்ற உத்திராவையும் அரசு அதிகாரிகள் மதிக்காமல் மேலும் இன்று அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின்பும் வட்டாச்சியர் எவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என கேள்வி எழுப்பினர்.உரிய பாதுகாப்புடன் கால்வாய்க்கு கான்கிரீட் பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு உரிய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிசெயற்பொறியாளர் (AEE) சதீஸ்குமார் மற்றும் முத்தூர் நீர்வளத்துறை உதவிபொறியாளர் (AE) ஆகியோரிடம் மனு கொடுத்தும் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கீழ்பவானி ஆயக்காட்டு நில உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் கி. வே.பொன்னையன் கூறியது : கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட வேலைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசு மட்டத்திலும் எல்லோரும் சொல்கிறார்கள். விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நீர்வளத்துறை இதன் வேலைகளை விரைவாக செய்து கொண்டிருக்கும் வேளையில் மங்களப்பட்டி அருகில் சில சுயநல சக்திகள் கடைமடை விவசாயிகளுக்கு செல்லும் கால்வாயை வேலையை தடுத்து நிறுத்தி உள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் 9 பேர் மீது அரசு பணியை தடுப்பதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து மனு ரசீது நேற்றைக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு காவல் துறையும், வட்டாட்சியர் சேர்ந்து இந்த பிரச்சனையை சமாதி கட்டுவதற்காக சமாதான பேச்சுவார்த்தை என்று காங்கேயம் வட்டாட்சியர் மாலையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு எங்களது வழக்கறிஞர் இந்த அழைப்பானை பார்த்த பிறகு உடனடியாக ஒரு பெரிய அறிக்கையை தயார் செய்து இதுவரை நீதிமன்ற தீர்ப்பின் நடவடிக்கை என்ன உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கேயம் வட்டாட்சியருக்கு இப்படி ஒரு சமாதான கூட்டத்தை ஏற்படுத்த அதிகாரம் இல்லை. இது உயர் நீதிமன்றத்தை அபகரிக்கும் குற்றச் செயலாகும் என்ற அறிக்கையை எங்களிடத்தில் கொடுத்துள்ளார். இதை நாங்கள் இந்த சமாதான பேச்சு வார்த்தை என்ற நாடகத்தை மருதலிக்கின்றோம். இது சட்ட விரோதமானது என்று எங்கள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தயாரித்த ஆவணத்தில் தெளிவு பெற சொல்லிவிட்டார். இது போன்ற பாடங்களை நடத்திக் கொண்டிருக்காமல் காவல்துறையும் வருவாய் துறையும் ஆயக்காட்டு நில உரிமையாளர்களின் உரிமையை பாதுகாப்பதும், உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இவருடைய கடமை இன்று இந்த காத்திருப்பு போராட்டத்தில் தெளிவு பட சொல்கின்றோம். தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற வேண்டும் பெரும் மக்கள் திரள் போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று பேசினார்.