குடிபோதையில் கீழே விழுந்த முதியவர் பலி

வெள்ளகோவிலில் குடிபோதையில் கீழே விழுந்த முதியவர் பலி

Update: 2024-08-10 05:25 GMT
வெள்ளகோவில் உத்தமபாளையம் காட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 61). ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு காசு நோய் பாதிப்பு இருந்தது அதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு குணமாகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வெள்ளகோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வெள்ளகோயில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News