காங்கேயத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் 

காங்கேயத்தில் குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம். ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மீது பொய் புகார் கொடுத்ததாக குற்றச்சாட்டு . நள்ளிரவில் 7 மணி நேரம் போராட்டம்

Update: 2024-08-11 07:40 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ளது குண்டடம் ஒன்றிய செயலாளர் சிவா செந்தில் குமார்  அவர்களின் வீடு. அங்கு நேற்று இரவு 10 மணியளவில் செங்கோடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம். திமுக நிர்வாகிகள்  பொய்யாக புகார் கொடுப்பதற்கு உறுதுணையா செயல்பட்டதாகக் கூறி பொதுமக்கள் ஆவேசம். காங்கேயம் காவல்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காங்கேயம் ஊதியூர் அருகே உள்ளது செங்கோடம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குட்கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியின் பெண் தலைவராக சரஸ்வதி இருந்து வருகின்றனர்.இதே ஊராட்சியின் துணை தலைவராக பாஜகவை சேர்ந்த பாலராமநாதன்பதவி வருகின்றார் . மேலும் இவர்களுடன் 8 உறுப்பினர்கள் காங்கிரஸ்,திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் துணைத்தலைவர் பாலராமநாதன் உடன் லட்சுமி (காங்கிரஸ்),முத்து பிரபாவதி , தீபவதி, சரஸ்வதி (திமுக) ஆகியோர் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாட்டு இருந்து வந்தது. மேலும்  இதே ஊராட்சியி சுமார் ரூ.90 லட்சத்திற்கு மேல் பணம் உள்ளது. இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்ததால் ஆழ்துளை கிணறு அமைக்கவும் புதிய சாலைகள் போடவும் பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்த வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களில் கையெழுத்து போடவேண்டும். ஆனால் இந்த துணை தலைவர் உட்பட இந்த 5 பேரும் கையெழுத்து போடவில்லை. இதனால் நேற்று முன்தினம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து தலைவரிடம் நேரில் சென்று முறையிட்டனர் . தலைவரோ இது போல் 5 பெரும் கையெழுத்து போட மாறுகின்றனர் அதனால் கடந்த 2 மாதங்களாக ஊராட்சியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கூட மாத சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து வார்டு உறுப்பினர் தீபா அவர்களின் வீட்டிற்கு ஆதிதிராவிட பொதுமக்கள் சென்றுள்ளனர். நீங்கள் கையெழுத்து போட்டால் மட்டும் தான் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என கூறியுள்ளனர். இதை கேட்ட தீபா,அவரின் கணவர் சின்னசாமி, மகன் பரத்ராஜ் ஆகியோர் ஆதிதிராவிட மக்களை சக்கிலி , பறையன் என்ற கெட்ட வார்த்தையில் அசிங்கமாக பேசியதாகவும் இதனால் வேதனை அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பி ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் கொடுக்கப்பட்ட புகாருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது வரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊதியூர் பேருந்து நிறுத்தம் அருகே தற்காலிக சாமினாவால் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த  திமுக நிர்வாகிகள் ஆனா 9 வார்டு மெம்பர் சரஸ்வதியின் கணவர் பெரியசாமி தூண்டுதலின் பெயரில் 7 வார்டு மெம்பர் மனோகரன் (அருந்ததியர்) மூலமாக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கதிர் என்பவர் பெயரில் பொய்யான புகார் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் மனோகரன் வீட்டிற்கு வந்தால் எதற்கு பொய்யான புகார் கொடுத்தாய் என கேட்கலாம் என்றிருந்தனர். ஆனால் இரவு 9 மணியாகியும் மனோகரன் வீடு செல்லவில்லை. இதை அடுத்து போன் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டதற்கு என்னை ஒன்றிய செயலாளர் சிவசெந்தில் குமார் வீட்டில் இருக்கின்றேன் என்னை ஊருக்கு விடமாட்டேன் என்று சொல்கின்றனர் என கூறியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ செந்தில்குமார் வீடு காங்கேயம் தாராபுரம் சாலை நீதிமன்றத்திற்கு எதிராக உள்ளது அங்கு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வார்டு மெம்பர் மனோகரனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும்படி கோஷமிட்டுள்ளனர். 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாலை 4 மணிவரை போராடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு  குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவசெந்தில்குமார் மூலமாக கொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பின் மெம்பர் மனோகரனை அழைத்துக் கொண்டு தான் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் நள்ளிரவு முழுவதும் காங்கேயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News