ஆனந்த வள்ளியம்மன் சப்பர வீதி உலா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு சப்பர வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து வந்தனர்.

Update: 2024-08-16 06:13 GMT
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு ஆக., 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். நேற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளினார். நேற்று மாலை 5:00 மணிக்கு தேர் பவனி துவங்கியது. பக்தர்கள் தேங்காய்களை உடைத்து நேர்த்தி செலுத்தினர். சப்பர பவனி நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து, நிலையை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்தனர். இன்று கோயில் மண்டகப்படியில் ஆடித்தபசு விழா நடைபெறும். விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்திருந்தனர்.

Similar News