ராமநாதபுரம் நான்காம் ஆண்டு யோகாசன போட்டி நடைபெற்றது

யோகா சங்கமும் தமிழ்நாடு யோகா சங்கமும் தனியார் பள்ளியில் நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான யோகாசன போட்டிநடைபெற்றது

Update: 2024-08-18 06:50 GMT
ராமநாதபுரம் யோகா சங்கமும் தமிழ்நாடு யோகா சங்கமும் இணைந்து ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான யோகாசன போட்டியை நடத்தினர். இப்போட்டியில் தேர்வு வருபவர்கள் மாநில போட்டிக்கான தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டியை ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஸ் தொடங்கி வைத்து பேசும்போது உலக நாடுகளில் எல்லாம் யோகாசனம் வளர்ந்த நிலையில் உள்ளது தற்போது பத்தாண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் இந்திய அளவில் மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் பரவி உள்ளது. மாணவர்கள் இந்த யோகாசனத்தை கற்று மிகப்பெரிய நிலையில் வரமுடியும் இதில் தான் மூச்சு பயிற்சியை கற்றுக் கொள்ள முடியும் என்றார். இப்போட்டியில் மற்றமாநிலங்களில் நடக்கும் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் சிறந்த வேலைவாய்ப்புகளையும்பெறலாம் என்றார். போட்டி ஏற்பாடுகளை யோகாசன சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் செய்திருந்தார்.

Similar News