வடலூரில் பூங்கா புதுப்பிக்கும் பணி தொடக்கம்
வடலூரில் பூங்கா புதுப்பிக்கும் பணி தொடங்கியது
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி 8 வது வார்டு என். எல். சி அலுவலகர் நகரில் உள்ள சிறுவர்கள் பொழுதுபோக்கு பூங்கா புதுப்பிக்கும் பணிக்கான வேலைகளை நகரமன்ற தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். உடன் துணை தலைவர் சுப்புராயலு நகர மன்ற உறுப்பினர் ஷாகுல் ஹமீது, இளைஞரணி சக்திவேல், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.