மக்கள் ஆரோக்கிய இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

வத்தலகுண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் ஆரோக்கிய இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்

Update: 2024-08-21 18:43 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையானது இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார தேவையாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்தும் மற்றும் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் விறுவீடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் வத்தலகுண்டு மருத்துவமனையை நாடி வருகின்றனர் . கொடைக்கானல் கீழ்லை பகுதிகளில் திடீரென விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய வத்தலகுண்டு மருத்துவமனையில் எந்தவித வசதிகளும் இல்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து வத்தலகுண்டு மக்கள் ஆரோக்கிய இயக்கத்தினர் அரசு மருத்துவமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு வத்தலக்குண்டு சுற்று கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் . அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் தலைக்காயம் மற்றும் விபத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் அதிக படுத்த வேண்டும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Similar News