சொந்த நூலகங்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம்

சொந்த நூலகங்களுக்கு விருது பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

Update: 2024-08-21 19:01 GMT
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்த நூலகம் அமைத்து சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தீவிர வாசகர்கள் தானாகவோ அல்லது பிறர் மூலமாக சம்மந்தப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள நூலகங்களிலோ அல்லது dlodindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் மாவட்ட நூலக அலுவலர், ஸ்பென்சர் காம்பவுண்டு, பேருந்து நிலையம் அருகில் திண்டுக்கல் என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம். மாவட்ட அளவில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்புள்ள "சொந்த நூலகத்திற்கான விருது“ மற்றும் சான்றிதழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பெறும் புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News