விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பை வலியுறுத்தி நடந்தது
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுரேஷ், மூத்த வழக்கறிஞர் பழனிமுத்து, சிவக்குமார், காசி விஸ்வநாதன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 20ஆம் தேதி அன்று திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொல்கத்தாவில் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, மாய மணிகண்டன், ஜெயபிரகாஷ், குமரகுரு, ராஜ்மோகன், மோகன்ராஜ், ராகவன், மகாலிங்கம் பெண் வழக்கறிஞர்கள் மகாலட்சுமி, இலக்கியா ஸ்ரீ அபிராமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.