கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள கருவை மரத் தோப்பில், கோவிலானூர் கிராமம், மேலவீதியை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் ரகுவர்மன் (50) என்பவர் அரசு அனுமதி மற்றும் உரிமம் எதுவும் இல்லாமல் ரூ.2 ஆயிரத்து 100 மதிப்பிலான 5 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.