விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயிலில் அடிபட்டு சாவு

யார் அவர் என விசாரணை

Update: 2024-08-24 08:08 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விருத்தாசலம்- சேலம் ரயில்வே இருப்புப் பாதையில் எருமனூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு தலை நசுங்கி உடல் சிதறி இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தரிப்பு நிறத்தில் சேலையும், கோல்டன் பார்டர் போட்ட கத்தரிப்பு நிறத்தில் ஜாக்கெட்டும், பச்சை நிற பாவாடையும், கழுத்தில் தாயத்தும் அணிந்திருந்தார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சேலம் - விருத்தாசலம் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார், ரயிலில் அடிபட்டு தான் இறந்தாரா, அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து உடலை கொண்டு வந்து ரயில் தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து ரயில்வே காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News