விருத்தாசலத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி
அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் விருத்தாசலத்தில் என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பத்மப்பிரியா, தக்கோலம் தேவபாலன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு தேர்வு செய்தனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். என்றென்றும் பெரியார் ஏன், அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின், தொலைநோக்கு பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதி காவலர் கலைஞர், தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருள் வழங்கி பேசியதாவது:- முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் படிக்கின்ற இளைஞர்களுக்கு இதுபோன்று பேச்சு போட்டிகளை உருவாக்க வேண்டும் திறமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் இத்தகைய நிகழ்வுகளை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இளைஞர்களுக்கு வாழ்க்கையில் உயர்வதற்கான பல்வேறு வழிவகை செய்து பல்வேறு துறைகளிலே பல்வேறு வளர்ச்சிகளை இன்றைக்கு உருவாக்கி நான் முதல்வன் திட்டத்தில் என்ன படிக்க வேண்டும், எங்கே போய் படிக்க வேண்டும் எப்படிப்பட்ட பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும், உதவி தொகை பெறுவது எப்படி, படித்து முடித்த பிறகு எங்கே பணிக்கு செல்ல வேண்டும். தற்போது பட்டதாரிகள் எல்லாம் ஐடிஐ படிப்பதற்கு வருகிறார்கள். ஐடிஐ படித்தவர்களுக்கு பல்வேறு தொழில்கள் காத்திருக்கிறது. ஐடிஐ படிக்கும்போது ஒரு மாணவருக்கு 750 ரூபாய் ஸ்டைபெண்ட் மற்றும் ஆயிரம் ரூபாய் புதுமைப் பெண் திட்டம் மற்றும் புதல்வன் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் என ஒவ்வொருவருக்கும் 1750 ரூபாய் மாதம் அரசு உதவித்தொகை கிடைக்கிறது. திறன் மேம்பாடு பயிற்சி கொடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று வேலைக்கு சென்று இருக்கிறார்கள். முதல்வர் அவர்கள் 71ஐடிஐ யில் 4.0 என்ற திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் மையத்தை உலக தரத்திற்கு நம் முதல்வர் உருவாக்கி இருக்கிறார். கடந்தாண்டு 2700 மாணவர்கள் படித்தார்கள். அதில் 2310 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல உதவி செய்யக்கூடிய ஒரு இரக்கமுள்ள ஈரமுள்ள மனிதராகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் . கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய முதலமைச்சருடைய தேர்தல் பிரச்சாரமும் நம்முடைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்களும் 8,000க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பயணம் செய்து 130 இடங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்து ஒரு சிறப்பான வியூகம் அமைத்ததன் காரணத்தினால் தான் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இன்று 40 க்கு 40 இடம் பிடித்து வெற்றியை தந்திருக்கிறார்கள். தற்போது கூட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம் முதல்வர் தெரிவித்துள்ளார். அதனால் நம்பிக்கையோடு இருங்கள். நடக்கும் என்று நம்புங்கள் நிச்சயமாக நடக்கும் . முயற்சி எடுங்கள் அதிலும் விடாமுயற்சி எடுங்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் மீது தன்னம்பிக்கை கொண்டிருங்கள். முடியாது என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை நிச்சயமாக முடியும் என பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துரைராஜ், ராஜேஷ், நாராயணசாமி, சதாம் ஜார்ஜ், பாரதிராஜா, நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ், ஆசைத்தம்பி, அமிர்தலிங்கம், சார்பு அணி நிர்வாகிகள் ராமு, மதியழகன், கொளஞ்சியப்பன், காந்தி, சி.வெ.வெங்கடேசன், வடிவேல், சுரேஷ், இளங்கோவன், அறிவழகன், செல்வமணி, கார்த்திக், கோவிந்தன், பாசில், கார்த்திக், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், துணை அமைப்பாளர்கள் குமார், கார்த்திக், செந்தில், மணிவண்ணன், தளபதி, நெல்லிக்குப்பம் சாமிநாதன், நெய்வேலி ஸ்டாலின், விருத்தாசலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தர்ம மணிவேல், நடராஜ், வெங்கடேசன், ஆட்டோ பாண்டியன், கோதண்டபாணி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.