விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் கம்மாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்மாபுரம் மேட்டு தெருவை சேர்ந்த தம்பசாமி மகன் செல்வகுமார் (வயது 28), மாயவன் மகன் திருஞானம் ( 32), ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் போலீசார் வளைத்து பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.