விருத்தாசலம் கடைவீதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2024-08-24 16:25 GMT
விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் வர்த்தக சங்கம் கட்டிடத்தில் நகர தலைவர் கோபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். 2023-24 வரவு செலவு கணக்குகளை பொருளாளர் சேட்டு முகம்மது வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், மாநில துணை தலைவர் பழமலை, முன்னாள் தலைவர் ஷண்முகம், கண்ணன், ஜெய்சங்கர், காய்கறி மார்க்கெட் சங்கம் நிர்வாகிகள், ஹோட்டல் உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் அனைத்து வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதில் விருத்தாசலம் கடைவீதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வர்த்தகர்ளும் தமது வர்த்தக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News