நவீன தொழில்நுட்ப உத்தியில் வெள்ளரி சாகுபடி
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாரம், சின்னகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர், கானாதுகண்டன் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார். இவருக்கு விருத்தாசலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 2024-25 ஆம் ஆண்டின் மூலமாக, 2.5 ஏக்கர் பரப்பளவிற்கு நிலப்போர்வை வழங்கப்பட்டது. மேலும் 4 ஏக்கர் பரப்பளவிற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அருண், தோட்டக்கலை உதவி இயக்குநர் நந்தினி ஆகியோர் நவீன உத்திகளை பயன்படுத்தி வெள்ளரி பயிரிட்டுள்ள இராஜசேகரனின் வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப உத்திகளை சரியாக பயன்படுத்தி உள்ளாரா, பூச்சி நோய் தாக்குதல்கள் உள்ளதா என ஆய்வு செய்த அதிகாரிகள் பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள். அப்போது தோட்டக்கலை துணை அலுவலர் சிவக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் கல்பனா ஆகியோர் உடனிருந்தனர்.