ராமநாதபுரம் வயதானாலும் உழைப்பு விடாத முதியவர்

60 வயதிலும் அயராது உழைக்கும் முதியவர் சைக்கிளிங் செய்து  சானம் தீட்டும் விதம் காண்போரை நெகிழ வைக்கிறது

Update: 2024-08-25 05:13 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டபடி அதை மிதித்து சுழற்றிக் கொண்டிருந்தார். சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு அதை சுற்றுவது பற்றி சென்று பார்த்தபோது அவர் பழைய சைக்கிளை வைத்து புது விதமாக  அவர்களாகவே செய்து அதில் சாணம் பிடிக்கும் கல் பொருத்தப்பட்டு சைக்கிளை சுழற்றுவதன் மூலம் சானகல் வேகமாக சுற்றுவதை வைத்து அரிவாள் மனை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சானம் தீட்டி கொடுக்கிறார். கடந்த காலத்தில்  சாணம் தீட்டுவதற்கு வீட்டுக்கு கொண்டு வந்து சானம் தீட்டுவதும் அந்த இயந்திரத்தை ஒற்றை கலால் மிதித்து அதன் மூலம் சானம் தீட்டும் முறை ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த நிலையில் இவர் மிகவும் வித்தியாசமாக சைக்கிளை சாணம் தீட்டுவதற்கு ஏற்றவாறு அமைத்து அதன் மூலம்  இரண்டு கால்களால் பெடல் செய்து அழுத்தி சுழற்றி சாணம் தீட்டுகிறார்.   தஞ்சாவூரைச் சேர்ந்த மாசி வயது 60 தொட்டாலும் உடல் உழைப்பு கூடுதலாகவே உள்ளது இவர் இதற்கு என்று தனியாக மோட்டார் பைக் உடன் இணைத்த கூண்டு ஒன்று செய்து அதில் அனைத்து பொருட்களையும் அதில் ஏற்றி  பட்டுக்கோட்டையில் பழைய இரும்புகளை வாங்கி கொண்டு அங்கிருந்து கடற்கரை வழியாக அதிராமபட்டிணம், தொண்டி ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரை சென்று மீண்டும் 1 மாதம் கழித்து வீடு திரும்புவதாக கூறுகிறார்.   இவரே தயார் செய்து விற்கும் ஒரு அரிவாள் மனை தகுதிக்கு ஏற்றார் போல் 400,  500 ரூபாய் என விற்கப்படுகிறது.  இவ்வாறு உழைப்பை கண்ட பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்த அரிவால் மனை, கத்தி, அரிவால் போன்றவற்றை சானம் தீட்டிய அவருக்கு அதற்கான கூலியை வழங்கி சென்றனர்.         அவரிடம் நாம் பேசிய போது அரசு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது அதன் மூலம் பயன்பட்டீர்களா என்று கேட்டபோது அவருக்கு அரசு நலத்திட்டங்களை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று தெரிவித்தார். இது போன்ற உழைக்கும் நபர்களை அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு போதிய உதவிகள் செய்தால் அவர்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட நன்றாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

Similar News