மொபட் வண்டியை கொளுத்தி விட்டு சென்ற மர்ம நபர்கள்

நடவடிக்கை எடுக்க கோரி பெண் போலீசில் புகார்

Update: 2024-08-25 14:33 GMT
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பேரலையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி அலமேலு(42). இவருக்கு கருவேப்பிலங்குறிச்சி. காவல் நிலையம் அருகே உள்ள சுடுகாட்டு பாதை அருகே விவசாய நிலம் உள்ளது. இங்கு தனது மொபட் வண்டியை நிறுத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று மொபட் வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மொபைல் வண்டியை அடையாளம் தெரியாத நபர் யாரோ தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இதில் மொபட் வண்டி முழுவதும் எரிந்த நிலையில் எலும்பு கூடாக நின்றுள்ளது. இதுகுறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News