திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருக்ஷ்ணர், ராதை வேடமிட்டு சிறப்பு வழிபாடு!

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருக்ஷ்ணர், ராதை வேடமிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2024-08-26 07:03 GMT
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு திருப்பூரில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமாக இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்திற்கு பின்னர் வரும் அஷ்டமி திதியை கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவித்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருவது போல கால் பாத சுவடுகளை வைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமான ஒன்று அதுபோல இன்று திருப்பூரில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவித்து வீடுகளில் பாத சுவடுகள் வரைந்தும் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.‌ கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் புல்லாங்குழல் வாசித்தும் நடனமாடியும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

Similar News