விருத்தாசலம் பகுதியில் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் சேலம் சாலையில் தென்கோட்டை வீதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகளை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்ததும், அவர் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (வயது 64) என்பது தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த 80 லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.