சங்கரன்கோவில் அருகே இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் இளைஞர் ராஜேஷ்கண்ணா(24) என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இதனால் இவருக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.