உடுமலை அருகே சுற்றுலாத்துறை அதிகாரி ஆய்வு

பணிகள் விரைவில் துவங்கும் என தகவல்

Update: 2024-08-27 17:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் திருமூர்த்திமலை உள்ளது. அடிவாரத்தில் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும்,மலைமீது 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்திஅணை, படகு இல்லம்,நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்து உள்ளன. சுற்றுலா தலங்களில் அணை பூங்கா உருவாக்குதல்,படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்த பல்வேறு நடவடிக்கைகள் சுற்றுலா துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சலிங்க அருவி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.இங்கு மாதந்தோறும் சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.எனவே இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். அப்போது திருமூர்த்திமலையில் மேம்படுத்த வேண்டிய 18 அம்ச கோரிக்கைகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் ரவி மாவட்ட சுற்றுலா அதிகாரியிடம் அரவிந்த் குமார் அதிகாரியிடம் வழங்கினார். ஆய்வின் போது இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள்,சுற்றுலா ஆர்வலர்கள் பிரசாத்,நவீன் மற்றும் சந்தோஷ் உடன் இருந்தனர்.

Similar News