அச்சன்புதூர் ஊருக்குள் பஸ் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அச்சன்புதூர் ஊருக்குள் பஸ் வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் டூ செங்கோட்டை அச்சன்புதூர் வழியாக செல்லும் பேரூந்துகள் அனைத்தும் அச்சன்புதூர் ஊருக்குள் முகம்மதியா திடல் பேரூந்து நிறுத்திற்கு வந்து செல்லாமல், ஊருக்கு வெளியில் காவல்நிலையம் அருகில் நின்று மக்களை ஏற்றி செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதானோர்கள் நீண்ட தூரம் சென்று பேரூந்து ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஆகவே பேரூந்துகள் அனைத்தும் முகமதியா திடல் பேரூந்து நிறுத்தத்திற்கு வந்து செல்ல, போக்குவரத்துதுறை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்